ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''நான் சொன்னாதான் உண்டு..’’ காதல் குறித்து பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா!

''நான் சொன்னாதான் உண்டு..’’ காதல் குறித்து பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா!

ரஷ்மிகா மந்தனா

ரஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா முதன்முதலில் கிரிக் பார்ட்டி என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவருக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டி என்ற கன்னட நடிகருடன் காதல் வயப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கி வரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ரஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஷ் என்று சொல்லும் இந்திய அளவில் ரஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால், திரையுலகில் இவர் பிரபலம் அடைவதற்கு முன்னரே, காதலில் விழுந்து, காதலருடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக அதை முறித்துக் கொண்டார். அதன் பிறகு தான் நடிகையாக மிகப்பெரிய அளவுக்கு பேசப்பட்டார். தற்போது, நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் கிசுகிசுக்கப்படும் முன்னாள் காதலர் யார் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா முதன்முதலில் கிரிக் பார்ட்டி என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவருக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டி என்ற கன்னட நடிகருடன் காதல் வயப்பட்டார்.

முதல் படத்தில் அறிமுகமாகும் ஜோடியாக நடிப்பவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது திரைப்படங்கள், சீரியல்கள் என்று எல்லா இடங்களிலுமே சகஜமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது ரக்ஷ்த்டும் ரஷ்மிகாவும் காதல் வயப்பட்டனர்!

இருவரும் முதலில் நல்ல நண்பர்களாக பழகி, ஈர்ப்பு அதிகரித்து, காதலை தெரிவித்துக் கொண்டனர். பல மாதங்கள் இருவரும் டேட் செய்தனர். இருவரைப் பற்றிய செய்திகள் கிசுகிசுக்களாக மட்டும் அல்லாமல் தலைப்பு செய்தியாக வெளிவரும் அளவுக்கு இவர்களுடைய பழக்கம் வெளிப்படையாக இருந்தது.

ரஷ்மிகா மற்றும் ரக்ஷித் அழகான பொருத்தமான ஜோடியாக இருப்பதாக இவர்களின் ரசிகர்களும் கொண்டாடினார்கள். அதன் பிறகு, சமூகவலைத்தளத்தில் ரஷ்மிகா, ரக்ஷித்தை காதலிப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ரஷித் மற்றும் அவரது தந்தையுடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளக்கான கணக்கில் பகிர்ந்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவிலேயே திருமண தேதியை அறிவிப்பதாக தன்னுடைய ரசிகர்களுக்கும் அறிவித்திருந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களிலேயே, 2018 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரேக் அப் செய்துவிட்டனர் என்று கிசுகிசுக்கள் வரத் தொடங்கின.

அதன் பிறகு திரைப்படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி ரஷ்மிகா நடிக்கத் துவங்கினார். தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு மொழி படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக அடையாளம் காணப்பட்டார். வேறு மொழிகளில் ரக்ஷித்துடன் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமணம் நின்று போனது பற்றி பலருக்கும் தெரியாது. இந்த பிரேக்அப் பற்றி இப்போது வரை ரஷ்மிகா எங்கேயும் வெளிப்படையாக பேசியதில்லை.

அதன் பிறகு, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. தற்போது இவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டன. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் ஒன்றாக ஜிம்மில் இருந்து வெளியே வரும் புகைப்படம் இணையம் முழுக்க வைரலானது. ஆனால் ரஷ்மிகா இதைப் பற்றி ‘யாரை காதலிக்கிறேன் என்று நானாக வெளிப்படையாக கூறும் வரை அது உண்மை இல்லை’ என்று மிக வெளிப்படையாக கூறிவிட்டார்!

First published:

Tags: Actress Rashmika Mandanna, Entertainment, Tamil cinema news