ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு பட ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடிய சுட்டிப்பெண் - ராஷ்மிகா கமெண்ட்

விஜய்யின் வாரிசு பட ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடிய சுட்டிப்பெண் - ராஷ்மிகா கமெண்ட்

வாரிசு படத்திலிருந்து விஜய் - ராஷ்மிகா

வாரிசு படத்திலிருந்து விஜய் - ராஷ்மிகா

சுட்டிப் பெண் ஒருவர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று தெலுங்கில் வெளியானது.

படத்தில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் அதில் இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த பொங்கலுக்கு ஃபெஸ்டிவல் மோடுக்கு ஏற்ற படமாக வெளியாகியிருக்கிறது. தமன் இசையில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல்களை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். மேலும் ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் விஜய், ராஷ்மிகாவின் ஸ்டைலில் டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பகிர்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில் சுட்டிப் பெண் ஒருவர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கியூட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் என ஹார்ட் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் பட குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரிலுள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்துள்ளார். அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொண்டாட்டம் மிக ரகசியமாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu