‘தளபதி 65’ ஹீரோயின் குறித்து வெளியான அப்டேட்!

தளபதி 65 படத்தில் விஜய் உடன் நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தளபதி 65’ ஹீரோயின் குறித்து வெளியான அப்டேட்!
தளபதி 65 படத்தில் விஜய் உடன் நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது படம் வெளியாகும் என்றும் தீபாவளிக்கு மாஸ்டர் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்துக்கு இசையமைக்க தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.




இந்நிலையில் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் மாளவிகாமோகனன் அந்த வாய்ப்பைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் படிக்க: ‘திறவுகோல் மந்திரவாதி’... விக்ரம் - துருவ் இணையும் படத்தின் டைட்டிலா இது?மேலும் படிக்க:சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக பரபரப்பு வழக்கு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading