நடிகை ராஷ்மிகா மந்தன்னா ஒரே வருடத்தில் 3 ஆடம்பர பங்களாக்களை வாங்கியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' படத்தில் தனது அழகு மற்றும் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். குறுகிய காலத்தில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய பார்வையாளர்களையும் கவர்ந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
ராஷ்மிகா பாலிவுட்டில் தனது சிறகுகளை விரித்து, 'குட்பை' மற்றும் 'மிஷன் மஜ்னு' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார், அதோடு மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புஷ்பா' படத்திலும் நடித்திருக்கிறர். இந்தப் படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த
ராஷ்மிகா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடகு விஜராப்பேட்டையில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார். செப்டம்பர் 2020-ல் ஹைதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் ஒரு புதிய வீட்டை வாங்கினார். அதோடு இந்த வருட தொடக்கத்தில் பாலிவுட் படங்களில் நடிப்பதை முன்னிட்டு, மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி தனது செல்ல நாயான ஆராவுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

ராஷ்மிகா மந்தனா புதிய வீடு
இப்போது ராஷ்மிகா கோவாவில் தனது நான்காவது சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். தற்போது நீச்சல் குளம் மற்றும்
புத்தர் சிலை இருக்கும் வெளிப்புறத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து புதிய வீடு வாங்கியுள்ள, ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.