ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு இசை வெளியீட்டு விழா : அப்போவோட கில்லி படம் பார்த்தேன்; விஜய்தான் என்னோட கிரஷ் - ராஷ்மிகா ஓபன் டாக்!

வாரிசு இசை வெளியீட்டு விழா : அப்போவோட கில்லி படம் பார்த்தேன்; விஜய்தான் என்னோட கிரஷ் - ராஷ்மிகா ஓபன் டாக்!

விஜய் - ராஷ்மிகா

விஜய் - ராஷ்மிகா

Varisu Vijay நான் இங்க நின்னு உங்கள் முன்னாடி பேசுகிறேன் என்பதை நம்ப முடியவில்லை. அப்பாவுடன் இணைந்து கில்லி படம் பார்த்தேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். பல மேடைகளில் விஜய் தான் தனக்கு பிடித்த நடிகர் என ராஷ்மிகா கூறி வந்திருக்கிறார்.

அதற்கேற்ப வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, ''நான் இங்க நின்னு உங்கள் முன்னாடி பேசுகிறேன் என்பதை நம்ப முடியவில்லை. அப்பாவுடன் இணைந்து கில்லி படம் பார்த்தேன்.

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவை டிவியில் எப்போது பார்க்கலாம்?

அதன் பின் விஜய் பேசுவதை பார்ப்பது, அவரை போல நடனமாடுவது, அவரை போல இமிட்டேட் செய்வது என இருந்தேன். நான் விஜய்யுடைய ரசிகை. உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? உங்கள் Crush யார் என்று கேட்டால் நான் விஜய் என்றுதான் சொல்வேன். என்று பேசினார்.

ரஞ்சிதமே பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும் நிலையில் விஜய் - ராஷ்மிகாவின் நடனம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை நடனமாட ஜானி அழைக்க விஜய் மறுத்துவிட்டார். பின்னர் மேடையில் ராஷ்மிகாவுடன் ரஞ்சிதமே பாடலுக்கு ஜானி நடனமாடினார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu