Home /News /entertainment /

அந்த நடிகையை புக் செய்யுங்கள்.. சிபாரிசு செய்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

அந்த நடிகையை புக் செய்யுங்கள்.. சிபாரிசு செய்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி

ஐட்டம் பாடலுக்கு பிரபல டிவி நடிகையான ராஷ்மி கவுதம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    தெலுங்கு திரையுலகில் தனக்கென திரளான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போது’ போலா ஷங்கர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிறுத்தை சிவா இயக்கி 2015 ஆம் ஆண்டில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக் தான் இந்த 'போலா ஷங்கர்' திரைப்படம். இதில் தல அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன், சூரி, மொட்டை ராஜேந்திரன், அஷ்வின் ககுமன்னு, மன்சூர் அலிகான் போன்ற பலர் நடித்திருந்தனர்.

    அந்த வகையில் தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தல அஜித் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். போலா ஷங்கர் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாப்பாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் உள்ளதாக இயக்குநர் தெரிவித்த நிலையில், இதற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியே ஒரு நடிகையை பரிந்துரை செய்துள்ளார்.

    போலா சங்கர் திரைப்படத்தில் இடம்பெறவுள்ள ஒரு ஐட்டம் பாடலுக்கு பிரபல டிவி நடிகையான ராஷ்மி கவுதம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு சிரஞ்சீவியே படக்குழுவுக்கு சிபாரிசு செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. இதனை அறிந்த நடிகை ராஷ்மி கவுதமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.

    நடிகை ராஷ்மி கவுதம் சின்னத்திரையில் தனக்கான ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பல்வேறு திரைப்பட கதாபாத்திரங்களிலும் இதற்கு முன்னர் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இவர் ஒரு நடன கலைஞரும் ஆவார். பல்வேறு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். எனவே போலா ஷங்கர் திரைப்படத்திலும் இவர் சிறப்பாக நடனம் ஆடுவார் என்பதற்காக சிரஞ்சீவி இவரை பரிந்துரைத்து இருக்கலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆயினும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    போலா சங்கர் திரைப்படத்தின் பட்ஜெட்டுக்குள் ராஷ்மி கவுதம் அடங்குவதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த படத்தை மேஹர் ரமேஷ் இயக்கி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டில் நடிகர் வெங்கடேஷ் நடித்த ஷாடோ திரைப்படத்தை கடைசியாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் சீரஞ்சீவி கடைசியாக நடித்த சை ரா நரசிம்ஹா ரெட்டி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே போலா ஷங்கர் படத்தில் படக்குழுவினர் எதிர்பார்த்திருக்கும் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி