Dhanush: தனுஷ் 44 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 2 நாயகிகள்!

தனுஷ்

தனுஷின் இருவேறு காலட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

  • Share this:
    தனுஷ் தற்போது தனது 43-வது படமான மாறனில் நடித்து வருகிறார். அத்துடன், சேகர் கம்முலா, செல்வராகவன், ராட்சசன் ரவிக்குமார், மாரி செல்வராஜ் உள்பட பலரது இயக்கத்தில் படங்கள் நடிக்கவிருக்கிறார். ஆனால், இவையனைத்தையும் முந்திக் கொண்டு மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிப்பதாக முன்பு கூறியிருந்தோம். அது உண்மையாகியிருக்கிறது.

    தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஆர்.ஜவஹகர் இயக்குகிறார். இது இவரும், தனுஷும் இணையும் நான்காவது படமாகும். இதற்குமுன் யாராடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை மித்ரன் தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தனுஷின் இருவேறு காலட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தில் இரு நாயகிகள். ஒருவர் ராஷி கண்ணா, இன்னொருவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் தனுஷ், ராஷி கண்ணா இடம்பெறும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் இரண்டே மாதத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கவிருப்பதாக படக்குழு கூறியுள்ளது. அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: