பெண்களுக்கு எதிரான ஆபாச வரிகள்: பிரபல பாடகர் மீது வழக்குப் பதிவு!

news18
Updated: July 9, 2019, 7:32 PM IST
பெண்களுக்கு எதிரான ஆபாச வரிகள்: பிரபல பாடகர் மீது வழக்குப் பதிவு!
பாடகர் ஹனிசிங்
news18
Updated: July 9, 2019, 7:32 PM IST
ஆபாச வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியதாகக் கூறி பிரபல பாடகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல பஞ்சாபி பாடகர் யோ யோ ஹனிசிங். இந்தி படங்களிலும் பாடல்கள் பாடியுள்ள இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மக்னா என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாடி கூறுகையில், “ஹனிசிங்கின் சர்ச்சைக்குரிய பாடல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பாடல் காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. மாநில அரசு அந்தப் பாடலுக்கு தடை விதிக்க வேண்டும். ஹனிசிங் தொடர்ந்து அவரது பாடல்களில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்.” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த புகார் தொடர்பாக பஞ்சாப் போலீஸ் ஹனி சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...