ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

30000 கிரிஸ்டலில் வித்தியாசமான தோற்றம் - ஃபேஷன் ஷோவில் கலக்கிய ராப் பாடகி!

30000 கிரிஸ்டலில் வித்தியாசமான தோற்றம் - ஃபேஷன் ஷோவில் கலக்கிய ராப் பாடகி!

டோஜா கேட்

டோஜா கேட்

டோஜாவின் பளபளப்பான தோற்றம் பிரபல ஒப்பனை கலைஞரான பாட் மெக்ராத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரிஸ் பேஷன் வீக்கின் நட்சத்திரங்கள் நிறைந்த ஷியாபரெல்லி நிகழ்ச்சியில், அமெரிக்க ராப் பாடகி டோஜா கேட் தனது தனித்துவமான உடை அலங்காரத்துடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

27 வயதான பாடகி ஞாயிற்றுக்கிழமை நடந்த சியாபரெல்லி ஹாட் கோச்சர் பேஷன் ஷோவில் சிவப்பு கிரிஸ்டல்களில் பிரகாசித்தார். அவரின் இந்த ஷோ-ஸ்டாப்பிங் ஃபேஷன் தோற்றத்திற்காக 30,000 ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாடகியின் முழு தலை, முகம், மார்பு மற்றும் கைகள் கலைநயத்துடன் சிவப்பு நிற கிரிஸ்டல் கற்களால் அலங்கரிப்பட்டது. அதிகாரப்பூர்வ ஷியாபரெல்லி இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரின் புகைப்படம் பகிரப்பட்டது. டோஜாவின் பளபளப்பான தோற்றம் பிரபல ஒப்பனை கலைஞரான பாட் மெக்ராத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. அவர் இன்ஸ்டாகிராமில் அந்த இறுதி தோற்றத்தின் வீடியோவை வெளியிட்டார். இந்தத் தோற்றம் முழுமைப்பெற 30,000 கிரிஸ்டல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனை முடிக்க கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆனதாகவும் அவர் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

பிரபல வெப் சீரிஸ்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் டிவி!
 
View this post on Instagram

 

A post shared by @patmcgrathrealஇதையடுத்து டோஜா கேட்டின் இந்த தோற்றம் இணையத்திலும் கவனம் பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Hollywood