வாழ்க்கை வரலாறுகள் இந்திய சினிமாவில் அதிகளவு எடுக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைக்கிறது. முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு.
சச்சின், டோனியின் வாழ்க்கை வரலாறைத் தொடர்ந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு தாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில்தான் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னொரு முக்கியமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு இந்தி சினிமாவில் தயாராகி வருகிறது. அவர் கபில்தேவ்.
இன்றளவும் கிரிக்கெட் என்றால் நம் மனதில் வரும் ஓரிரு முகங்களில் முதன்மையானவர் கபில்தேவ். ஆல்ரவுண்டர். 1983 இல் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று தந்தவர். அவரது வாழ்க்கை வரலாறை 83 என்ற பெயரில் எடுத்துள்ளனர். கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். நம்மூர் ஜீவா, ஸ்ரீகாந்தாக வருகிறார். இவர்கள் தவிர தீபிகா படுகோன் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கம்.
1983 இல் வலிமையான வெஸ்ட் இன்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பையை வென்றது ஒரு சாகஸ கதையைப் போன்றது. அதையே படத்தின் தலைப்பாக்கியிருப்பதால் அந்தப் போட்டிகளை படத்தில் மறுஉருவாக்கம் செய்திருக்க வாய்ப்புள்ளது. 1983 உலகக் கோப்பையை பார்க்க முடியாமல் போனவர்களுக்கு இந்தப் படம் ட்ரீட்டாக இருக்கும்.
83 படத்தை டிசம்பர் 24 இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். 3டி யிலும் படம் வெளியாவது இன்னொரு சிறப்பு.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.