சக்திமான் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 13, 1997 முதல் மார்ச் 27, 2005 வரை ஒளிபரப்பான இந்திய சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியான சக்திமான், திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் சக்திமான் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இயல்பான ஈர்ப்பை கொண்டுவர ரன்வீர் சிங்கால் முடியும் என்று தயாரிப்பாளர்கள் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தற்போது கைவசம் படங்கள் இருப்பதால், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
90-களில் இந்தியாவின் அபிமான சூப்பர் ஹீரோவாக இருந்த சக்திமானின் கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பால் உயிர் கொடுத்த, முகேஷ் கன்னா இப்படத்தை தயாரிக்க உள்ளார். அதன் டீசர் மற்றும் அறிவிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதில், "இந்தியாவின் முக்கிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் டைட்டில் ரோலில் நடிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த தொலைக்காட்சித் தொடர், 8 ஆண்டுகள் ஓடியது. முகேஷ் கன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சக்திமான் தொடரில், வைஷ்ணவி, கிடு கித்வானி, டாம் ஆல்டர், ஷிகா ஸ்வரூப், கஞ்சேந்திர சௌஹான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலினின் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!
எல்லாக் குழந்தைகளும் தங்களுக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோவைத் திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதால், சக்திமான் தொடரைப் பார்ப்பதற்கென்றே வார இறுதி நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொடர் பல்வேறு மொழிகளில் பல இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ranveer singh