முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்ச்சையை ரசிக்கும் நடிகர் ரன்வீர் சிங்.. முதல் படத்திலிருந்தே தொடரும் கதை!

சர்ச்சையை ரசிக்கும் நடிகர் ரன்வீர் சிங்.. முதல் படத்திலிருந்தே தொடரும் கதை!

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

பேட்டி ஒன்றில் 26 பெண்களுடன் இதுவரை தான் உடலுறவு கொண்டுள்ளதாக ரன்வீர் சிங் பேச ஹிந்தி சினிமாவில் உள்ள கலாசார காவலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • Last Updated :

நிர்வாண புகைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ள நடிகர் ரன்வீர் சிங் ஆரம்பம் முதலே சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருகிறார். இதுவரை அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் என்னென்ன? 

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்மாவத் பாலிவுட் திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் ரன்வீர் சிங். தேர்ந்த நடிப்பாற்றலையும் இந்தியாவே வியக்கும் உடல் மொழியையும் பெற்றிருக்கும் ரன்வீர் சிங் அதற்கு முன்னர் ராம்லீலா திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தாலும் நடிப்பையும் கடந்து சர்ச்சைகளின் மூலம் தனது பெயர் நிலைத்திருப்பதையே ரன்வீர் அதிகம் விரும்புகிறார் போல.

மகளின் பிறந்த நாள்.. வேற லெவலில் கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்!

செல்வ செழிப்பு மிக்க குடும்ப பின்னணியில் இருந்து ஹிந்தி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த ரன்வீர் நடிக்க தொடங்கிய உடனே அவரது தந்தை 10 கோடி ரூபாய் செலவு செய்து ரன்பீர் சிங்கை நாயகனாக அறிமுகம் செய்தார் என்ற பேச்சு பாலிவுட் முழுவதும் பரவியது. அதனை ஆம் என்று ஒப்புக்கொண்டு அந்த பேச்சு அதிகம் பகிரப்படுவதை ரன்வீர் சிங்கும் விரும்பினார். ரன்வீர் சிங் நாயகனாக அறிமுகமான பேண்ட் பஜா பாரத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற போதும் அடுத்தடுத்து ரன்வீர் சிங் திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் விளம்பர படங்களில் நடிக்கவே ஆர்வம் கட்டினார்.

Ranveer Singh nude shoot controversy bollywood actor Ranveer Singh deepika padukone caeer life
தீபிகா - ரன்வீர்

அதற்கு அவர் சொன்ன காரணம் மக்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படும் பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என விரும்புவதாக, வழக்கமான விளம்பரங்களில் நடிப்பது பரபரப்பை ஏற்படுத்தாது என்பதை உணர்ந்த ரன்வீர் பெரும்பாலான பாலிவுட் நாயகர்கள் நடிக்க மறுக்கும் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்து சர்ச்சையை கூட்டினார். மேலும் அந்த ஆணுறை விளம்பரத்திற்கான திரைக்கதையை தானே எழுதி இயக்கியது பேசுபொருளானது.

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா.. தேடி வந்த வாய்ப்பு!

இதுபோதாது என பேட்டி ஒன்றில் 26 பெண்களுடன் இதுவரை தான் உடலுறவு கொண்டுள்ளதாக ரன்வீர் சிங் பேச ஹிந்தி சினிமாவில் உள்ள கலாசார காவலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையில் ரன்வீர் சிங் எதிர்பார்த்ததும் அதைத்தான். தொடர்ந்து சக பாலிவுட் நடிகர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதன் மூலம் பத்திரிகைகளில் பேசுபொருளாக இருக்க முடியும் என்பதை நம்பும் ரன்வீர் சிங் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரோடு அடிக்கடி தீவிர வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தார்.

பாலிவுட்டின் டாப் ஸ்டாரான நடிகை தீபிகா படுகோனை மணந்த பின்னர் நடிகைகள் உடனான மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அண்மைக் காலமாக வித்தியாசமான உடைகளில் தோன்றுவது அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிடுவது என மக்களின் கவனத்தை பெற முயற்சி செய்து வந்த ரன்வீர் சிங் எல்லாவற்றுக்கும் உச்சமாக நிர்வாண போட்டோவை வெளியிட்டு இருப்பது நாடு முழுவதும் பரபரப்பையும், சில தரப்பில் எதிர்ப்பையும் பற்ற வைத்துள்ளது. பெண்கள் அமைப்பின் கடும் எதிர்ப்பு, காவல்துறை வரை சென்றுள்ள நிலையில் இவை அனைத்தையும் சர்ச்சைகளின் நாயகன் ரன்வீர் சிங் புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருப்பார் என்பது நிஜம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ranveer singh, Actress Deepika padukone, Bollywood