• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Anniyan: ஷங்கரின் அந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங்?

Anniyan: ஷங்கரின் அந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங்?

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

கடந்த 2005-ல் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    கடந்த 2005-ல் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழில் அதிகபட்சமாக எத்தனை கோடியில் படம் இயக்க முடியுமோ அந்த எல்லையை 2.0 படத்தில் தொட்டு விட்டார் ஷங்கர். இதற்கு மேல் போக வழியில்லை என்ற நிலையில் திரும்பிப் பார்ப்பதுதானே வழக்கம். அப்படி தனது இந்தியன் படத்தை தூசி தட்டி அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தார்.

    கமலின் அரசியல் ஹேங் அவுட் காரணமாக அப்படம் முடியாமல் தொக்கி நிற்கிறது. தயாரிப்பு தரப்பிலும் பல பிரச்சனைகள். இதனால் இந்தியனை கைவிட்டு ராம் சரணை நாயகனாக்கி தெலுங்கு - தமிழில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் மூழ்கியுள்ளார் ஷங்கர். இன்னும் ஆரம்பிக்கப்படாத இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க, சிரஞ்சீவி முக்கிய வேடமேற்கிறார்.

    இதையடுத்து தனது அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அந்நியன் ஊழலை பற்றிய படம். இந்தியாவில் ஊழல் என்பது எவர்கிரீன் சப்ஜெக்ட். எப்போது வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம். இதனை இந்தியில் எடுக்க தீர்மானித்திருக்கிறார் ஷங்கர்.

    இதற்கு முன் முதல்வன் படத்தை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் ஷங்கர். அப்படம் இந்தியில் சரியாகப் போகவில்லை. இந்தமுறை ஷங்கர் அந்நியன் ரீமேக்கிற்காக ரன்வீர் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: