ரன்வீர் சிங் மற்றும் அவரது தந்தை ஜக்ஜீத் சுந்தர்சிங் பவ்னானியின் ஓ ஃபைவ் ஓ மீடியா ஒர்க்ஸ் எல்எல்பி என்ற நிறுவனம் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
Oh Five Oh Media Works LLP நிறுவனம் ஜூலை 8, 2022 அன்று இந்த அபார்ட்மெண்ட்டை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பதிவு செய்துள்ளது. பாந்த்ரா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் சாகர் ரேசம் என்ற கட்டிடத்தில் 16வது மாடியிலிருந்து 19-வது மாடி வரை ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு வீதம் வாங்கி இருக்கிறாராம் ரன்வீர். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளங்களில் இருந்து அரபிக் கடலை பார்த்து ரசிக்க முடியுமாம்.
வீட்டின் பரப்பளவை பொறுத்தவரை, 11,266 சதுர அடி கார்பெட் ஏரியாவும் 1,300 சதுர அடி பிரத்யேக மொட்டை மாடியும் உள்ளது. ரன்வீர் மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் சார்பாக, ரூ.7.13 கோடி முத்திரைக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் மொத்தத் தொகை ரூ.118.94 கோடி.
ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி சிவாங்கி
அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த பழைய கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் ஏற்கெனவே பழைய கட்டிடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே விலை உயர்ந்த அப்பார்ட்மெண்டுகளில் ஒன்றான இந்த குடியிருப்பு, சல்மான்கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கும், ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கும் இடையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வீட்டில் 19 கார்களை பார்க் செய்வதற்கான உரிமையையும் சேர்த்து வாங்கியிருக்கிறாராம் ரன்வீர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.