ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரன்வீர் சிங்கை பார்க்க வைத்து கேக் சாப்பிட்ட பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ

ரன்வீர் சிங்கை பார்க்க வைத்து கேக் சாப்பிட்ட பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ

பூஜா ஹெக்டே - ரன்வீர் சிங்

பூஜா ஹெக்டே - ரன்வீர் சிங்

தற்போது ரன்வீர் சிங்கும் பூஜாவும் சர்க்கஸ் படத்தில் நடித்து வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை பூஜா ஹெக்டேவும் கேக் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் கேக் போல அதிகம் விரும்பப்படும் சில விஷயங்கள் உள்ளன. கிறிஸ்துமஸ், நியூ இயர், பிறந்தநாள் அல்லது ஏதோ ஒரு மகிழ்ச்சியான தருணம் என எல்லாவற்றிற்கும் கேக் முக்கியத்துவம் பெறும். இதற்கிடையே ரன்வீர் சிங் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கேக் மீது தங்களுக்குள்ள காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் ரன்வீர்.

வீடியோவில் ரன்வீர் கறுப்பு டி-ஷர்ட் மற்றும் டிரவுஸருடன் சர்க்கஸ் பட தோற்றத்தில் இருக்கிறார். மேசையின் முன் பல கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகளுடன் அவர் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவர் தனது கேக்கை சாப்பிட்டு முடித்துவிட்டு, பூஜா ஹெக்டேயின் தட்டில் இருந்து ஒரு துண்டை எடுக்க முயற்சிக்கிறார்.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!

ஆனால் அவர் கையை தட்டி விடும் பூஜா, தனது கேக்கை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். தவிர தற்போது ரன்வீர் சிங்கும் பூஜாவும் சர்க்கஸ் படத்தில் நடித்து வருகிறார்கள். ரோஹித் ஷெட்டி இயக்கும் இதில் ஜானி லீவர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அஷ்வினி கல்சேகர், முகேஷ் திவாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ரன்வீர் மற்றும் வருண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் தீபிகா படுகோன் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ranveer singh, Pooja Hegde