முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனமாடிய ரன்வீர் சிங்!

வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனமாடிய ரன்வீர் சிங்!

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

வாத்தி கமிங் வீடியோ பாடல் யூ-டியூப்பில் 360 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் இறுதி போட்டியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அட்டகாசமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 15-வது பதிப்பின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடந்தது. இந்த நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங்கின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ரன்வீர் சிங், விஜய்யின் 'வாத்தி கம்மிங்' மற்றும் ராம் சரண்-ஜூனியர் என்.டி.ஆரின் 'நாட்டு நாட்டு, உள்ளிட்ட பிரபலமான சில பாடல்களுக்கு சுறுசுறுப்பாக நடனமாடினார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் ஸ்டைலாக தோள்பட்டையை அசைத்து ஆடியிருப்பார். அதே போல் அட்டகாசகமாக ஆடிய ரன்வீரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

வாத்தி கமிங் வீடியோ பாடல் யூ-டியூப்பில் 360 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வட சென்னை கானாவுடன் வெஸ்டர்ன் இசை கலந்து அனிருத் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ், நடிகைகள் நஸ்ரியா, ஜெனிலியா உள்ளிட்டோர் இந்தப் பாடலுக்கு நடனமாடிய கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ranveer singh, Actor Thalapathy Vijay