ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu First Single: ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெளியானது விஜய் குரலில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

Varisu First Single: ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெளியானது விஜய் குரலில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

விஜய்

விஜய்

Ranjithame Ranjithame: நீண்ட நாட்களாக படத்தின் முதல் சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று காலை மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்தது வாரிசு படக்குழு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    Varisu First Single Promo: நடிகர் விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.

    ' isDesktop="true" id="830464" youtubeid="t0hPzfc1pLU" category="cinema">

    நீண்ட நாட்களாக படத்தின் முதல் சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று காலை மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்தது வாரிசு படக்குழு. அதாவது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ அறிவிப்பே ட்ரெண்டிங்... இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்!

    ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி எம்எம் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியிருக்கிறார். எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது. முழுப்பாடல் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay