பழம்பெரும் மூத்த நடிகையான ரங்கம்மா பாட்டி நேற்று இயற்கை எய்தினார். வடிவேலு, கஞ்சா கருப்புடன் பல படங்களில் நடித்துள்ள ரங்கம்மா பாட்டியை குட்டிம்மா பாட்டி என்றே பலரும் அழைப்பார்கள். 83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவையில் தன்னுடைய உறவினர்கள் வீட்டில் வசித்து வந்தார். சினிமாவில் நன்கு சம்பாதித்த அவர், கடைசி காலத்தில் வறுமையில் வாடியதாக தெரிகிறது. அதிலும் பஸ் ஸ்டாண்டில் அவர் கைக்குட்டை விற்று அன்றாட செலவுகளை பார்த்துக் கொண்டு வந்ததாகவும் பல தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்நிலையில், அவரை தனது படத்தில் நடிக்க வைத்திருக்க இயக்குனர் வ. கெளதமன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்
அவர் பதிவிட்டிருப்பதாவது, “நான் நடித்து இயக்கிய "மகிழ்ச்சி" திரைப்படத்தில் "ஒரு வாரமா இந்த பாக்க வாயில ஊறப் போட்டண்டா கடிக்க முடியல... லவக்குன்னு கடிச்சிட்டியே நீ கெட்டிகாரண்டா" என்று கைகொட்டி கஞ்சா கருப்பின் தோளைத் தட்டி ஒரு குழந்தையை போல சிரிக்கும் ரங்கம்மா பாட்டியின் கொட்டப்பாக்கு நகைச்சுவையை யாராலும் மறக்க முடியாது.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா... என்கிற கவியரசு கண்ணதாசனின் பாடலில் செல்வி ஜெயலலிதா அவர்களோடு நடிக்கத் தொடங்கி தனது மரணம் வரை நாலைந்து தலைமுறைகளோடு நடித்த ரெங்கம்மா பாட்டியின் கலைப் பயணம் போராட்டம் நிறைந்தது.
இதையும் படிங்க.. COOK WITH COMALI : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. வரப்போவது இவர்கள் தான்!
எப்பொழுதாவது அலைபேசியில் வரும் ரங்கம்மா பாட்டி கௌதம் சார் படம் பண்ணுனா ரெங்கம்மா பாட்டிய மறந்துடாதீங்க.... எந்த வேஷம் குடுத்தாலும் பிச்சு ஒதறிடுவேன்... என்றபடி பெரு நம்பிக்கையோடு பேசும் ரங்கமா பாட்டியின் குரலை இனி கேட்கவே முடியாது.
தன் இறுதி மூச்சு வரை கலையின் மீது அடங்கா காதல் கொண்டு இயங்கிய எங்கள் ரங்கம்மா பாட்டி அவர்களே...
போய் வாருங்கள் நிம்மதியோடு...”
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.