Home /News /entertainment /

குருதி ஆட்டம் படத்திலிருந்து ரங்க ராட்டினம் வீடியோ பாடல் வெளியீடு…

குருதி ஆட்டம் படத்திலிருந்து ரங்க ராட்டினம் வீடியோ பாடல் வெளியீடு…

அதர்வா - ப்ரியா பவானி சங்கர்

அதர்வா - ப்ரியா பவானி சங்கர்

ரங்க ராட்டினம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அதன் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்திலிருந்து ரங்க ராட்டினம் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



    இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ரங்க ராட்டினம் வீடியோ பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.



    ஆக்சன் ஜானரில் குருதி ஆட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அந்தப் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்தனர்.

    மாதவனின் ராக்கெட்ரி – நம்பி விளைவு படத்திற்கு சீமான் பாராட்டு…

    ஆனால் தற்போது குருதி ஆட்டம் படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. அழுத்தம் இல்லாத காட்சிகள், பலவீனமான திரைக்கதை, சம்பவங்களுக்கான பின்னணி வலுவாக இல்லாதது உள்ளிட்டவை படத்தின் மீதான சுவாரஸ்யத்தை குறைத்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள்.

    கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்

    யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி