முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்ஃபி எடுத்த ரசிகரின் மொபைல் போனை பிடுங்கி வீசிய ரன்பீர் கபூர்

செல்ஃபி எடுத்த ரசிகரின் மொபைல் போனை பிடுங்கி வீசிய ரன்பீர் கபூர்

ரசிகருடன் ரன்பீர் கபூர்

ரசிகருடன் ரன்பீர் கபூர்

இந்த வீடியோ ரன்பீரின் வரவிருக்கும் விளம்பர படத்திற்கான ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் போனை பிடுங்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இனிமையான நடிகரான ரன்பீர் கபூர் ரசிகர்களின் செல்ஃபிகள் மற்றும் படங்களுக்கு போஸ் கொடுக்க ஒருபோதும் தவறுவதில்லை. ஆனால் அவரது சமீபத்திய வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர் விரக்தியில் ரசிகரின் ஃபோனை பிடுங்கி வீசுவதைப் பார்க்க முடிகிறது.

வைரலான வீடியோவில், ரசிகர் ஒருவர் ரன்பீருடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார். முகத்தில் புன்னகையுடன் போஸ் கொடுக்கும் அவர், சுற்றியுள்ளவர்கள் அந்த ரசிகரை நகருமாறு கேட்கும் போது கேட்கிறார்கள். அப்போது எரிச்சலடையும் ரன்பீர், ரசிகரிடம் ஃபோனைக் கேட்கிறார். அவர் செல்ஃபி எடுத்துத் தர தான் கேட்கிறார் என நினைத்து ரசிகரும் கொடுக்க, யாரும் எதிர்பார்க்கா வண்ணம், கையில் வாங்கிய ஃபோனை தூக்கி வீசி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் ரன்பீர்.

இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளைப் பெற்று வருகிறது. ரசிகருடன் ரன்பீர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சிலர் கருதினாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் இது ஒரு பிரான்க் வீடியோ என்று நம்புகிறார்கள். இந்த வீடியோ ரன்பீரின் வரவிருக்கும் விளம்பர படத்திற்கான ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

ரன்பீர் கடைசியாக அலியா பட்டுடன் இணைந்து பிரம்மாஸ்திராவில் நடித்திருந்தார். அயன் முகர்ஜி இயக்கிய இப்படம் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் வெளியாகியது. அவர் இப்போது ஷ்ரத்தா கபூருடன் இயக்குனர் லவ் ரஞ்சனின் தூ ஜூதி மைன் மக்கார் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் ஆகியவற்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ranbir Kapoor