Home /News /entertainment /

பாலிவுட்டில் வரவேற்பை பெறாத முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ஷம்ஷேரா… படக்குழுவினர் அதிர்ச்சி

பாலிவுட்டில் வரவேற்பை பெறாத முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ஷம்ஷேரா… படக்குழுவினர் அதிர்ச்சி

ஷம்ஷேரா படத்தில் ரன்பிர் - வாணி கபூர்

ஷம்ஷேரா படத்தில் ரன்பிர் - வாணி கபூர்

சமீபத்தில் இந்தியில் வெளியான எந்தவொரு பெரிய ஹீரோக்களின் படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆகஸ்ட் 11ம் தேதி வரவுள்ள ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஷம்ஷேரா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எதிர்பார்த்த வசூல் வராததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ராக் ஸ்டார், பர்ஃபி, ஏ தில் ஹே முஷ்கில், ராஜ்நீதி, சஞ்சு உள்பட பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியிருப்பவர் ரன்பீர் கபூர். இவர் சமீபத்தில் இந்தி முன்னணி நடிகை ஆலியா பட்டை திருமணம் முடித்தார்.

    ரன்பீர் இரட்டை வேடத்தில் நடித்த ஷம்ஷேரோ திரைப்படம் கடந்த வாரம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. பீரியட் ஜேனரில் வெளியான இந்த படத்திற்கு போதிய வரவேற்பை கிடைக்கவில்லை.

    முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தி லெஜெண்ட் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி அறிவிப்பு…

    இந்தியின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த நிலையில் மிகக்குறைந்த வசூலே படத்திற்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படத்திற்கு இந்த நிலைமையா என்று ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

    சமீபத்தில் இந்தியில் வெளியான எந்தவொரு பெரிய ஹீரோக்களின் படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடந்த சில மாதங்களில் கே.ஜி.எஃப்.2 மற்றும் புஷ்பா படங்கள் மட்டுமே அகில இந்திய அளவில் வரவேற்பை பெற்றன. இதைத்தவிர்த்து இந்தி வட்டாரங்களில் சில படங்கள் போதிய வசூலைப் பெற்றன.

    தமிழில் உறுதிமொழியேற்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட இளையராஜா…

    அடுத்தாக ஆகஸ்ட் 11ம் தேதி வரவுள்ள ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின், லால் சிங் சத்தா அற்புதமான திரைப்படம் என்று பாராட்டியிருந்தார்.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி