Home /News /entertainment /

பாலிவுட்டிற்கு நம்பிக்கையூட்டும் பிரமாஸ்திரா படத்தின் வசூல்…

பாலிவுட்டிற்கு நம்பிக்கையூட்டும் பிரமாஸ்திரா படத்தின் வசூல்…

பிரம்மாஸ்திரா படத்தில் ரன்பீர் கபூர்

பிரம்மாஸ்திரா படத்தில் ரன்பீர் கபூர்

பிரமாஸ்திரா படத்திற்கும் பாய்காட்பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தப் படம் மிகப்பெரும் ஓப்பனிங்கை பெற்றிருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாய்காட் பிரசாரத்தால் இந்தி  திரையுலகிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நேற்று வெளியான பிரமாஸ்திரா திரைப்படம் ஒரே நாளில் மட்டும் ரூ. 75 கோடியை வசூலித்திருக்கிறது.

    ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரமாஸ்திரா என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை கரண் ஜோகர், அபூர்வா மெஹ்தா, நமித் மல்ஹோத்ரா, ரன்பிக் கபூர், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரமாஸ்திரா படத்திற்கு பிரதம், சைமன் பிராங்கின் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

    ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம் ரவி…

    சுமார்410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாஸ்திரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக் கூடியதாக இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று வெளியான பிரமாஸ்திரா படத்திற்கு முதலில் கலவை விமர்சனங்களே கிடைத்து வந்தன. இதனால் வசூலில் பாதிப்பு இருக்குமா என்று கேள்விகள் எழுந்தன.

    இருப்பினும், விமர்சனங்களைத் தாண்டி நேற்று ரிலீசான முதல் நாளில் மட்டும் இந்தப் படம் 75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பாலிவுட்டில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிருத்விராஜ், லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்கள் பாய்காட் பிரசாரத்தால் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரமாஸ்திரா படத்திற்கும் பாய்காட்பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தப் படம் மிகப்பெரும் ஓப்பனிங்கை பெற்றிருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து கண்ணீர் சிந்த லிரிக்கல் வீடியோ வெளியானது… தந்தைகளுக்கு சமர்ப்பணம் என தனுஷ் ட்வீட்

    பாய்காட் எனப்படும் படங்களை புறக்கணிக்கும் பிரசாரத்தால் எந்த விளைவும் ஏற்படாது என்றும், படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்றும் பாலிவுட் சினிமா வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி