Home /News /entertainment /

புறக்கணிப்பு பிரசாரங்களை தாண்டி 2 நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்த பிரமாஸ்திரா…

புறக்கணிப்பு பிரசாரங்களை தாண்டி 2 நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்த பிரமாஸ்திரா…

பிரமாஸ்திரா பட நடிகர்கள்

பிரமாஸ்திரா பட நடிகர்கள்

பிரமாஸ்திரா படத்திற்கும் பாய்காட் பிரசாரம் சோஷியல் மீடியாவில் மேற்கொள்ளப்பட்டநிலையில் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாய்காட் புறக்கணிப்பு பிரசாரங்களைத் தாண்டி பிரமாஸ்திரா திரைப்படம் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ. 160 கோடியை வசூலித்துள்ளது.

    ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரமாஸ்திரா என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை கரண் ஜோகர், அபூர்வா மெஹ்தா, நமித் மல்ஹோத்ரா, ரன்பிக் கபூர், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரமாஸ்திரா படத்திற்கு பிரதம், சைமன் பிராங்கின் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

    சுமார்410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாஸ்திரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக் கூடியதாக இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    ‘திரைத்துறையினர் படும் கஷ்டங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ – நடிகை ரகுல் ப்ரீத்

    இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான பிரமாஸ்திரா படத்திற்கு முதலில் கலவை விமர்சனங்களே கிடைத்து வந்தன. இதனால் வசூலில் பாதிப்பு இருக்குமா என்று கேள்விகள் எழுந்தன.

    இருப்பினும், விமர்சனங்களைத் தாண்டி நேற்று முன்தினம் ரிலீசான முதல் நாளில் மட்டும் இந்தப் படம் 75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படம் ரிலீசான முதல் 2 நாட்களில் மட்டும் ரூ. 160 கோடி அளவுக்கு பிரமாஸ்திரா படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டீசர் வெளியீடு

    இன்று விடுமுறை நாள் என்பதால் இன்றைக்கும் கணிசமான அளவுக்கு வசூலை பிரமாஸ்திரா படம் பெற்றிருக்கும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள். இந்தி திரையுலகில் பாய்காட் பிரசாரம் காரணமாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

    பிரமாஸ்திரா படத்திற்கும் பாய்காட் பிரசாரம் சோஷியல் மீடியாவில் மேற்கொள்ளப்பட்டநிலையில் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி