முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் வாங்கிய பிரபல நிறுவனம்!

மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் வாங்கிய பிரபல நிறுவனம்!

மாநாடு

மாநாடு

மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையும், தெலுங்கு திரையரங்கு உரிமையும் விற்கப்பட்டதுடன் அப்படம் மீதான அனைத்துப் பிரச்சனைகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்த வருடத்தின் தமிழ் சூப்பர்ஹிட்களில் ஒன்று வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு. சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த இந்தப் படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல கலெக்ஷனைப் பெற்றது. தற்போது சோனிலிவ் ஓடிடி தளத்தில் மாநாடு பார்க்கக் கிடைக்கிறது.

இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கின் திரையரங்கு உரிமை விற்பனையிலும், ரீமேக் உரிமை விற்பனையிலும் பல சிக்கல்கள் இருந்தன. இதனால் தெலுங்கில் படம் இதுவரை திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. படத்தின் பிற மொழி ரீமேக் உரிமையும் விற்கப்படவில்லை.

திடீர் திருப்பமாக படத்தின் தெலுங்கு திரையரங்கு உரிமை மற்றும் அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமை என ஒட்டு மொத்த உரிமைகளையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது. ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ராமநாயுடுவால் தொடங்கப்பட்டது.

1964 இல் இருந்து தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் தயாரித்து வருகிறது. ஒடியா, போஜ்புரி, மராத்தி, குஜராத்தி பஞ்சாபி, வங்காள மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளது.

Also read... சூப்பர் சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்...!

பாரம்பரியமிக்க இந்நிறுவனம் தற்போது ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அசுரன், த்ரிஷ்யம் 2, மிஸ் கிரானி (தென்கொரியா) ஆகிய படங்களை தெலுங்கில் இவர்கள்தான் ரீமேக் செய்தனர். தென் கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸை தற்போது சாகினி டாகினி என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதுவரை 125 க்கும் அதிகமான படங்களை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read... சமந்தாவுக்கு போட்டியாக நடனத்தில் பட்டையை கிளப்பும் ரெஜினா...!

மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையும், தெலுங்கு திரையரங்கு உரிமையும் விற்கப்பட்டதுடன் அப்படம் மீதான அனைத்துப் பிரச்சனைகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

First published:

Tags: Maanaadu