விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ராணா டகுபதி!

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 800 என்று டைட்டிலுடன் எம்.எஸ்.ஸ்ரீபதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

news18
Updated: July 30, 2019, 8:30 PM IST
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ராணா டகுபதி!
ராணா டகுபதி | விஜய் சேதுபதி
news18
Updated: July 30, 2019, 8:30 PM IST
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் ராணா ட்குபதி இணைந்துள்ளார்.

133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 800 என்று டைட்டிலுடன் எம்.எஸ்.ஸ்ரீபதி இந்தப் படத்தை இயக்குகிறார். ஆனால் படக்குழு டைட்டில் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்போது இந்தப் படத்தில் பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் உடன் நானும், தார் பிக்‌ஷர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
Loading...தற்போது படக்குழு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: பொன்னியின் செல்வனில் இணைந்த பார்த்திபன்!

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...