Home /News /entertainment /

30% நேரடியாக மரணம்... தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்னையை சமந்தாவிடம் கூறி கண்கலங்கிய ராணா

30% நேரடியாக மரணம்... தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்னையை சமந்தாவிடம் கூறி கண்கலங்கிய ராணா

நடிகர் ராணா

நடிகர் ராணா

தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்னை குறித்து நடிகர் ராணா முதல்முறையாக வாய் திறந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டக்குபதி. இவர் நடிகை சமந்தா தொகுத்து வழங்கும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 27-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நடிகர் ராணா டக்குபதி கூறியிருப்பதாவது, வாழ்க்கை வேகமாக சென்று கொண்டிருந்த போதுதான் திடீரென ஒரு பாஸ் பட்டன் வந்தது. இதயத்தில் பிரச்னை, சிறுநீரகம் செயலிழப்பு, ஹெமரேஜ் ஏற்பட 70% வாய்ப்பு, நேரடியாக 30% மரணம் ஏற்பட வாய்ப்பு என தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்னையைக் கூறிய ராணா கண் கலங்கியுள்ளார். அதைப்பார்த்த சமந்தாவும் நிகழ்ச்சி அரங்கில் இருந்தவர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினர்.



கடந்த ஆண்டு நடிகர் ராணா உடல் மெலிந்து தாடியுடன் இருந்த புகைப்படம் வெளியான போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அமெரிக்காவில் அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்து தன்னைப் பற்றி வெளியாகும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராணா.



இந்நிலையில் தற்போது தனது உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து முதல்முறையாக நடிகர் ராணா வாய்திறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Rana Daggubati

அடுத்த செய்தி