பெண்கள் துர்கையின் மறு உருவம். ஆகையால் பெண் வெறுப்பு நாம் எதிர்த்து போராட வேண்டிய தீமை என்று குறிப்பிட்டுள்ளார் நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா ஸ்பந்தனா.
தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்தவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்தார்.
2012-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யாவுக்கு 2013- மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாண்டியா எம்.பி. தொகுதியில் 2013 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா, அடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ள ரம்யா, அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.
விஜய் தான் நம்பர் 1... வாரிசு தயாரிப்பாளர் பேச்சால் எழுந்த சர்ச்சை!
இந்நிலையில் தற்போது ட்விட்டரில், “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி தனது கருத்துக்காகவும், ராஷ்மிகா காதலரை பிரிந்ததற்காகவும், தீபிகா அவரது ஆடைக்காகவும் மற்றும் பல பெண்களை எல்லாவற்றுக்கும் அழகாக ட்ரோல் செய்தார்கள். தேர்வு சுதந்திரம் (Freedom of choice) நமது அடிப்படை உரிமை. பெண்கள் துர்கையின் மறு உருவம். ஆகையால் பெண் வெறுப்பு நாம் எதிர்த்து போராட வேண்டிய தீமை” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Deepika padukone, Actress Rashmika Mandanna, Actress sai pallavi, Actress Samantha