சூர்யா படத்தில் நடிப்பதை உறுதி செய்த ரம்யா பாண்டியன் - குஷியில் ரசிகர்கள்

சூர்யா படத்தில் நடிப்பதை உறுதி செய்த ரம்யா பாண்டியன் - குஷியில் ரசிகர்கள்
நடிகை ரம்யா பாண்டியன்
  • Share this:
தான் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், அதன் பின்னர் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன், புடவை அணிந்து தனது வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.

அந்தப் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் அவர் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தன.


இந்நிலையில் கொரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களுடன் சமூகவலைதள பக்கத்தில் உரையாடினார். அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய இடங்கள் குறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகை ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சிவிகுமார் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பதிலளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... குறைந்த நேரத்தில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறை...!
First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading