பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஒரு மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன், விஜய் டிவி-யின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதில் வனிதா விஜயகுமார் முதலாவது இடம் பிடித்து டைட்டிலை வென்றார். இரண்டாம் இடம் பிடித்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ரன்னரானார் ரம்யா.
இதையடுத்து கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். பொதுவாக பெரியளவில் வாய்ப்புகள் இல்லாதவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் தான் பிக் பாஸ் செல்கிறார்கள். ஆனால் பலருக்கு இது நேர் மாறாக நடந்து விடுகிறது.
இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக ரம்யா பாண்டியன், நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் அவர், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அந்த நிகழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பிக் பாஸை விட குக் வித் கோமாளி தான் சிறந்தது. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியும் கூட. காமெடியுடன் ஜாலியாக செல்லும். ரசிகர்களும் தங்களின் வெறுப்பை காட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தவிர ரம்யா பாண்டியன் நடித்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இதனை நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5