விவேக் நினைவாக மரம் நடுவதில் வித்தியாசம் காட்டிய ரம்யா பாண்டியன்

விவேக் நினைவாக மரம் நடுவதில் வித்தியாசம் காட்டிய ரம்யா பாண்டியன்

மரக்கன்று நடும் ரம்யா பாண்டியன்

மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

  • Share this:
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அடுத்தநாள் (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

விவேக்கின் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 1 கோடி மரங்கள் நடும் கனவுக்கு உயிர் கொடுத்து வந்த விவேக் இதுவரை 34 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். அவர் விட்டுச் சென்ற 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தற்போது கையிலெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அலுவலக வளாகத்தில் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)


மற்ற நடிகர்கள் தங்கள் வீடுகளில் ஒன்றிரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில் 59-வது வயதில் அவர் மரணமடைந்ததை உணர்த்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்டு வைத்து வித்தியாசம் காட்டியுள்ளார் ரம்யா பாண்டியன். அவருடன் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் உடனிருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: