விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கியுள்ளார்.

  • Share this:
ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாண்டியன், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பாரத்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனது மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருப்பதாக அவரது சகோதரர் பரசு பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீல நிறத்தில் இருக்கும் அந்த கார் கெத்தாக நின்றபடி ரம்யா போட்டோவுக்கு போஸ் கொடுக்க பிளேட்டில் RPBMW4 என்கிற எண் ஒட்டப்பட்டுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Parasu Pandian (@parasu_pandian)


2011-ம் ஆண்டு 21G அரசு பேருந்தில் பயணித்ததாகவும் 2021-ல் பிஎம்டபிள்யூ ஜிடி வகை சொகுசு காரை வாங்கியிருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து பிக்பாஸில் பங்கேற்ற சம்யுக்தா வாழ்த்து தெரிவித்து கமெண்ட் பதிவிட ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரம்யா பாண்டியன் வாங்கியிருக்கும் காரின் விலை ரூ.70 லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: