பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் தம்பி ஹீரோவாக நடிக்கிறாரா? அவரே கொடுத்த விளக்கம்

ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாண்டியன், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பாரத்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனது மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரது குடும்பத்தினரும் மக்களுக்கு அறிமுகமாகினர். அப்படி பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன். அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருக்கும் பரசு பாண்டியன் அத்தகவலை மறுத்திருக்கிறார். மேலும் இதுபோன்று வேறு என்ன தகவல்கள் எல்லாம் வைத்திருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: