Home /News /entertainment /

ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா? வைரலாகும் படம்!

ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா? வைரலாகும் படம்!

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

சமீபத்தில் 51 வயதை எட்டிய ரம்யா கிருஷ்ணன், இளம் வயதிலேயே ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

    நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படம் தான் அது.

    நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003-ல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது 17 வயதாகும் ரித்விக் என்ற மகன் உள்ளார். அவர் படிப்பை முடித்துவிட்டு திரையுலகில் சேர ஆர்வமாக உள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    சமீபத்தில் 51 வயதை எட்டிய ரம்யா கிருஷ்ணன், இளம் வயதிலேயே ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு', 'முதல் வசந்தம்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'வானமே எல்லை' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் நடித்தார்.

    ramya krishnan age, ramya krishnan family, ramya krishnan instagram, ramya krishnan wiki, ramya krishnan first movie, ramya krishnan movie list, ramya krishnan and nassar movies, ramya krishnan height, ரம்யா கிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் படங்கள், ரம்யா கிருஷ்ணன் குடும்பம், ரம்யா கிருஷ்ணன் மகன், ரம்யா கிருஷ்ணன் கணவர்

    சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த ரம்யா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார்.

    ramya krishnan age, ramya krishnan family, ramya krishnan instagram, ramya krishnan wiki, ramya krishnan first movie, ramya krishnan movie list, ramya krishnan and nassar movies, ramya krishnan height, ரம்யா கிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் படங்கள், ரம்யா கிருஷ்ணன் குடும்பம், ரம்யா கிருஷ்ணன் மகன், ரம்யா கிருஷ்ணன் கணவர்

    இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார் ரம்யா கிருஷ்ணன். அப்போது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அவரது படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ramya krishnan, Tamil Cinema

    அடுத்த செய்தி