Vanitha Vijayakumar: பிக் பாஸ் ஜோடிகளிலிருந்து வனிதா விலகியதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா?

ரம்யா கிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

”ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். ”

  • Share this:
    ’பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.

    பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இதில் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

    இதற்கிடையே தான் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா விஜயகுமார் அறிவித்தார். "பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த ஊடகங்கள், என் ரசிகர்கள் மற்றும் என் நல விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

    பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மேலும் அவர்களது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பு என அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

    எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்” என இது குறித்து அறித்தார்.

    இந்நிலையில் வனிதா குறிப்பிட்ட அந்த சீனியர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்து வந்தனர். இதற்கிடையே இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரம்யா கிருஷ்ணன், ‘பிக்பாஸ் ஜோடி படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பது வனிதாவை கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றும், ’என்னை பொருத்தவரைக்கும் இது ஒரு பிரச்சனையே இல்லை’ என்றும், ’இந்த விஷயம் தொடர்பாக என்னுடைய கருத்து என்னவென்றால் ’நோ கமெண்ட்ஸ்’ என்றும் தெரிவித்துள்ளார்.

    வனிதாவின் பெர்ஃபார்மென்ஸ் சரியில்லை எனக் கூறிய ரம்யா கிருஷ்ணன், 10-க்கு 1-2 மார்க் கொடுத்தது தான் இதற்குக் காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: