• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்...!

சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்...!

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

காட்பாதர் படத்துக்குப் பிறகு வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிரஞ்சீவி  படத்தில் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்பட்ட வேடத்தில் அவருக்குப் பதில் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அரசியலுக்கு குட்பை சொன்ன பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார் சிரஞ்சீவி. தமிழ் கத்தி படத்தின் ரீமேக்கில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவர், சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, இப்போது காட்பாதர் என சரசரவென படங்களில் நடிக்கிறார். இதில் ஆச்சார்யா பிப்ரவரியில் திரைக்கு வருகிறது. காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது மோகன்ராஜா படத்தை இயக்குகிறார்.

காட்பாதர் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக். இதில் மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என சொல்லப்பட்டது. லூசிபரில் மஞ்சு வாரியர் வில்லன் விவேக் ஓபராயின் மனைவியாக வருவார். அவருக்கு முதல் கணவன் மூலம் டீன்ஏஜ் வயதில் ஒரு பெண் இருப்பார். வில்லனுக்கு ஜோடி, டீன்ஏஜ் பெண்ணுக்கு தாய் என்ற அந்த கதாபாத்திரத்தை நயன்தாரா செய்ய வாய்ப்பில்லை என்று எழுதியிருந்தோம். அதுதான் நடந்திருக்கிறது.

Also read... சிவகார்த்திகேயனின் டான் படத்தின் புதிய புகைப்படங்கள்...!

நயன்தாரா நடிப்பார் என்று சொல்லப்பட்ட அந்த வேடத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். பல படங்களில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளது முக்கியமானது.

காட்பாதர் படத்துக்குப் பிறகு வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும், அவரது தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: