Home /News /entertainment /

இயக்குனர் ஷங்கர் – தயாரிப்பாளர் தில் ராஜு இடையே கருத்து வேறுபாடு? ராம்சரண் படத்திற்கு சிக்கல்…

இயக்குனர் ஷங்கர் – தயாரிப்பாளர் தில் ராஜு இடையே கருத்து வேறுபாடு? ராம்சரண் படத்திற்கு சிக்கல்…

தயாரிப்பாளர் தில் ராஜு - இயக்குனர் ஷங்கர்

தயாரிப்பாளர் தில் ராஜு - இயக்குனர் ஷங்கர்

ஷங்கர் தற்போது இந்தியன்-2 படத்தை தொடங்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு வரும் 24-ம் தேதி மீண்டும் ஆரம்பமாகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான், ராம் சரண் படத்தின் வேலைகள் தொடங்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என திரைத்துறையில் கூறுகின்றனர். ஷங்கர் பெயரில் திரைத்துறையில் வலம் வரும் சர்ச்சைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
    இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். அந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
    இந்தியன் 2 படம் எப்போது தொடங்கும் என்று கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

    ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அப்போதைய சூழலிலேயே அதிக செலவு செய்யப்பட்டிருந்ததால்  தயாரிப்பு நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று ஷங்கரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் ஷங்கருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இது போன்ற பிரச்னைகள் பெரியதாகிகொண்டே சென்றதால் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்காவில்லை.

    இதையடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தமானார். அதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ராம் சரண் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு படத்தை இயக்கவும் ஒப்பந்தமானார்.

    ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ஷாருக்கான் - தீபிகா படுகோன்!

    ரன்வீர் சிங் மற்றும் ராம் சரண் படங்களை இயக்க ஒப்பந்தமான நிலையில், லைகா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் இந்தியன்-2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என கோரினர்.

    வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு எடுக்கப்பட்டது. அதன்படி ராம் சரண் நடிக்கும் 15-வது படத்தை இயக்க சென்றார் ஷங்கர்.

    ராம் சரண் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து வட மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோருக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என திரைத்துறையில் கூறுகின்றனர். குறிப்பாக படத்தில் இரண்டு கலை இயக்குனர்கள் மாறிவிட்டனர். மேலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுரேந்தர் ரெட்டி என்பவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என தெரிவிக்கின்றனர்.

    Chennai Day : சென்னையை மையப்படுத்தி வெளியான திரைப்படங்கள்

    ராம் சரணின் 15-வது படத்திற்கு திட்டமிட்ட பட்ஜெட்டைவிட கூடுதலாக செலவாகி வருவதாகவும் கூறுகின்றனர். தமன் இசையில் உருவான ஒரு பாடலுக்கு ரஷ்ய நடன பெண்கள் 100 பேர் வேண்டும் என்று ஷங்கர் கேட்டுள்ளார். ஆனால் இங்கு இருப்பவர்களை வைத்து படமாக்கலாம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

    ஆனால் ஷங்கர், தான் திட்டமிட்டப்படி 100 ரஷ்ய பெண்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் கொரோனா காலமாக இருந்தாலும் அவர்களை வரவழைத்து பயிற்சி வழங்கி படமாக்கியுள்ளனர். அந்தப் பாடலுக்கு மட்டும் 7 கோடி ரூபாய் வரை செலவானதாக படக்குழு தரப்பிக் கூறுகின்றனர். இதனால் தயாரிப்பாளர் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

    இதை தொடர்ந்து  சமீபத்தில் ஒரு கல்லூரியை செட் அமைத்து படமாக்க வேண்டும் என்று ஷங்கர் கூறியதாகவும், அதற்கு தயாரிப்பாளர் உண்மையான கல்லூரி ஒன்றில் படமாக்கலாம், அதன் மூலம் செலவு குறையும் என்று கூறியதாகவும் பேசப்படுகிறது.

    ஆனால் ஷங்கர் தன்னுடைய கற்பனையில் உள்ள கல்லூரியை செட் அமைத்து படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டைவிட அதிகம் செலவாகி வருவதால் தில் ராஜு முடியாது என கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தெலுங்கு திரையுலகில் வேலை நிறுத்தம் தொடங்கியது.

    அதனால் அந்த பிரச்னை அப்படியே உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
    ஷங்கர் தற்போது இந்தியன்-2 படத்தை தொடங்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு வரும் 24-ம் தேதி மீண்டும் ஆரம்பமாகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான், ராம் சரண் படத்தின் வேலைகள் தொடங்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர். அதற்குள் ஷங்கர் - தில் ராஜு பிரச்னை முடிவுக்கு வரலாம் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இருந்தாலும் ஷங்கர் இயக்கும் படங்களில் பட்ஜெட் குறித்த சர்சைகள் வழக்கமாகியுள்ளன. இருந்தாலும் ஷங்கரின் கோரிக்கை அனைத்தும் படத்திற்கானதுதான். அதை செய்தால் படம் பிரமாண்டமாகவும் தனித்துவத்துடனும் இருக்கும் என்கிறார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி