ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''நான் கொடுத்துவச்சவ.. மனசார நன்றி சொல்றேன்'' - விபத்துக்குப்பின் வீடியோ வெளியிட்ட உருகிய ரம்பா

''நான் கொடுத்துவச்சவ.. மனசார நன்றி சொல்றேன்'' - விபத்துக்குப்பின் வீடியோ வெளியிட்ட உருகிய ரம்பா

ரம்பா

ரம்பா

தன் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ரம்பா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

  இதற்கிடையே சினிமாவுக்கு இடைவெளிவிட்ட ரம்பா, கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் ரம்பா, தனது குடும்ப புகைப்படங்களை ஷேர் செய்வார் என்பது குறிப்பிடதக்கது.

  WATCH – நா. முத்துக்குமார் வரிகளில் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்…’ பாடல்!

  இந்த நிலையில் தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். விபத்துக்குள்ளான டெஸ்லா காரின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். ரம்பாவுக்கு விபத்தா என அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்காக ஆறுதல் வார்த்தைகளையும் பதிவிட்டு வந்தனர்.

  வரிசை கட்டும் தமிழ் படங்கள்.. நவம்பர் முதல் வாரம் திரைக்கு வரும் படங்கள் லிஸ்ட்!

  இந்நிலையில் தன் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ரம்பா, அதில் ''நானும், மகள் சாஷாவும் நலமாக இருக்கிறோம். எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்குமே இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் கொடுத்துவைத்தவள். எனக்காக அனைவருமே பிரார்த்தனை செய்தீர்கள். வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Accident