ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து - மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபரீதம்...

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து - மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபரீதம்...

நடிகை ரம்பா

நடிகை ரம்பா

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ரம்பா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபத்து ஏற்பட்டதாக இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார்.

  கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

  இந்த நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வார் என்பது குறிப்பிடதக்கது.

  இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran)  மேலும், எல்லாம் கெட்ட நாட்கள், கெட்ட நேரம் என்றும் ரம்பா அப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருடைய மகள் குறித்தும் ரம்பா பதிவிட்டுள்ளார். தமது ஒரு மகள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் கேட்டுகொண்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Accident, Actress Ramba