முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபத்தில் முடிந்த நடிகரின் பாடி ட்ரான்ஸ்பர்மேஷன் முயற்சி

விபத்தில் முடிந்த நடிகரின் பாடி ட்ரான்ஸ்பர்மேஷன் முயற்சி

ராம் பொத்தினேனி

ராம் பொத்தினேனி

படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பாக மாற்ற ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி எடுத்துக் கொண்டார் ராம் பொத்னேனி.

  • Last Updated :

பாடி ட்ரான்ஸ்பர்மேஷன் என்ற பெயரில் நன்றாக இருக்கும் உடம்பை ஜிம்மில் அடித்துத் துவைப்பதை இந்திய ஹீரோக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். லிங்குசாமி பட ஹீரோ ராம் பொத்னேனியும் அப்படியொரு முயற்சியில் இறங்கி கழுத்தில் காயம்பட்டிருக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்துக்குப் பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க முயன்றார் லிங்குசாமி. ஆனால், கடைசியில் கிடைத்தவர் ராம் பொத்னேனி. சமீபத்தில்தான் படப்பிடிப்பை தொடங்கினார். இந்நிலையில், படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பாக மாற்ற ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி எடுத்துக் கொண்டார் ராம் பொத்னேனி. அப்போது அவரது கழுத்தில் அடிபட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

ஒரு நடிகனுக்கு எந்த வேடத்தையும் செய்யும், அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் உடம்பு அவசியம். ஆனால், சமீபமாக ஹீரோ என்றால் சிக்ஸ்பேக் வைத்து குட்டி அர்னால்டாக காட்சியளிக்க வேண்டும் என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் மசில் ஏற்றிய பின், தோற்றமே மாறி விடுகிறது. இரண்டு கைகளும் சாம்பார் வாளி வைத்திருப்பது போல் உடம்போடு ஒட்டாமல் தள்ளி நிற்பதை பார்க்கலாம். பிருத்விராஜ், விஷால், அருண் குமார் போன்றவர்கள் போலீஸ் வேடம் போடுகையில் இறுக்கமான உடையணிந்து பார்க்க ரோபோ போல இருக்கிறார்கள். இந்த தோற்றத்தை வைத்து உணர்வுபூர்வமான நெருக்கத்தை எப்படி பார்வையாளர்களிடம் ஏற்படுத்த முடியும்?

லிங்குசாமியின் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. க்ருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாச சித்தூரி படத்தை தயாரித்து வருகிறார். ராம் பொத்னேனியின் திரும்பி வரவுக்காக மொத்த யூனிட்டும் காத்திருக்கிறது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Telugu movie