ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'மூடநம்பிக்கை உடைஞ்சுது.. ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது' - காந்தாராவை பாராட்டித்தள்ளிய ராம்கோபால் வர்மா

'மூடநம்பிக்கை உடைஞ்சுது.. ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது' - காந்தாராவை பாராட்டித்தள்ளிய ராம்கோபால் வர்மா

காந்தாரா

காந்தாரா

கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழில் பொன்னியின் செல்வன் வசூல் வேட்டையை நிகழ்த்திய அதே நேரம் கர்நாடகாவில் சத்தமில்லாமல் வெளியானது காந்தாரா. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட விதமும் அப்படத்தின் ரீச்சை செமையாக கொண்டு சென்றது.

  கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை அசால்டாக தாண்டியது. தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் வெர்ஷன்கள் வசூலை குவிக்க ஆரம்பித்துள்ளன.

  ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

  இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பாராட்டை பதிவு செய்துள்ள இயக்குநர் ராம்கோபால் வர்மா, அதிக பட்ஜெட் படங்களை கலாய்த்து தள்ளியுள்ளார். இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், '' அதிக பட்ஜெட் படங்கள்தான் மக்களை தியேட்டருக்குள் இழுக்கும் என்ற மூட நம்பிக்கையை ரிஷப் ஷெட்டி உடைத்துவிட்டார். காந்தாரா மிகப்பெரிய பாடம். காந்தாரா கலெக்‌ஷனால் 200 கோடி, 300 கோடி, 500 கோடி பட்ஜெட் இயக்குநர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடம் சொல்லிக்கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு சினிமா உலகத்தினர் ட்யூஷன் கட்டணம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்

  கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தா... விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு இயக்குநர் நவீன் பதில்

  ஐ.எம்.டி.பி. படங்களின் ரேட்டிங்கில் இந்திய அளவில் காந்தாரா திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு 9.5 புள்ளிகளை ரசிகர்கள் அளித்துள்ளனர். 8.9 புள்ளிகளுடன் ஜெய்பீம் இரண்டாவது இடத்திலும், 8.4 புள்ளிகளுடன் கேஜிஎப் 2 படம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காந்தாரா திரைப்படம் கர்நாடகாவில் சிறு தெய்வ வழிபாட்டுடன், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை குறித்து படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்திற்காக நடக்கும் பிரச்சனையை படத்தின் மையக்கருவாகி இருந்தார் ரிஷப் ஷெட்டி. அதில் எருமை மாடுகளை கொண்ட விளையாட்டு போட்டி காட்சிகளாக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugadoss C
  First published: