Home /News /entertainment /

தமிழில் வெளியாகும் ராம் கோபால் வர்மாவின் பெண்

தமிழில் வெளியாகும் ராம் கோபால் வர்மாவின் பெண்

பெண்

பெண்

தமிழில் பெண் என்ற பெயரில் அதேநாளில் வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் படம் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ராம் கோபால் வர்மாவின் அடுத்த கவர்ச்சி திரைப்படம் தமிழில் பெண் என்ற பெயரில் வெளியாகிறது.

ஒருகாலத்தில் ராம் கோபால் வர்மா படங்கள் என்றால் இந்தியாவே உற்று கவனிக்கும். மரபான சினிமா கதைகளை, திரைக்கதைகளை உடைத்து புதிய தளத்தில் படங்களை தந்தவர் வர்மா. நிழல் உலக கதைகளில் அவரது சத்யா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி போன்ற படங்களை அடிக்க இன்னும் எந்தப் படமும் வரவில்லை. அதே போல் ஹாரர், த்ரில்லர்களில் அவர் ஏற்படுத்தி வைத்த பென்ச் மார்க்கை இன்னும் யாரும் தொடவில்லை.

ஒருகட்டத்துக்கு மேல் யாருக்கும் அடிபிசகும். அது தான் வர்மாவுக்கும் நடந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், மனதில் தோன்றுவதை எல்லாம் படமாக்க ஆரம்பித்தார். மாதத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகின. அதன் பிறகு இள வயது நடிகைகளை வைத்து கவர்ச்சியான படங்களை எடுக்க ஆரம்பித்தார். லெஸ்பியன் போன்ற கதைகளை கையாண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கியிருக்கும் படம் லடுகி, என்டர் தி கேர்ள் ட்ராகன் என்ற உப தலைப்புடன் டிசம்பர் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழில் பெண் என்ற பெயரில் அதேநாளில் வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் படம் வெளியாகிறது. இதில் நாயகியாக பூஜா பலேகர் நடித்துள்ளார். இவர் தற்காப்புக் கலை நிபுணர். இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம் என இதனை வர்மா விளம்பரப்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க - இந்த வலியும், வேதனையும் துரோகிக்கும் வரக்கூடாது - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

படத்தில் வர்மா குறைவாக செலவழித்தது நாயகியின் காஸ்ட்யூமிற்காகத்தான் இருக்கும். சண்டைக் காட்சி,பாடல் காட்சி என எதிலும் கவர்ச்சியான காஸ்ட்யூம் தான். அடுத்து வர்மா எந்த மாதிரி படம் எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி