தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிகள் தங்களின் 18 வருட தாம்பத்திய வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தது திரையுலகிலும், அதற்கு வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களின் பிரைவஸியை மதியுங்கள் என்ற அவர்களின் வேண்டுகோளை காலில் போட்டு தேய்த்து, அவர்களே அறியாத அவர்களின் வாழ்க்கைக் கதைகளை சில மீடியாக்கள் திரைக்கதையாக்கி விற்று வருகின்றன.
இந்நிலையில், சர்ச்சைகளை தேடிச் சென்று உருவாக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் தன் பங்குக்கு ஒரு பதிவை இட்டுள்ளார். இதில் அவர் சம்பந்தப்பட்ட தனுஷ், ஐஸ்வர்யா குறித்து ஏதும் கூறவில்லை. தனது நீண்ட நாள் பகையான திருமணம் என்ற பந்தத்தை அடித்து விளாசியிருக்கிறார்.
"பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்து குறித்து இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கின்றன. திருமணத்தைவிட எதுவும் காதலை விரைவாக கொலை செய்வதில்லை. காதல் நீடிக்கும்வரை காதலிப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியம். அதன் பிறகு திருமணம் என்னும் சிறைக்குள் சிக்காமல் கடந்து சென்றுவிட வேண்டும். திருமணத்தில் உள்ள காதல் 3 முதல் 5 நாள்களே நீடிக்கும். புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Star divorces are good trend setters to warn young people about the dangers of marriages
"இருவரது ஆபத்தான குணங்களை பரிசீலிப்பதால் திருமணங்கள் அமைதியாகவும், விவாகரத்து அதில் இருக்கும் விடுதலையுணர்வு காரணமாக விசேஷ நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடப்பட வேண்டும்" எனவும் அவர் கூறியுள்ளார். நமது முன்னோர்களால் திணிக்கப்பட்ட மிகவும் மோசமான சடங்கு திருமணம் எனவும் அவர் சாடியுள்ளார்.
ராம் கோபால் வர்மா திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.