விளக்கேற்றச் சொன்ன பிரதமர்... சிகரெட்டை பற்றவைத்த பிரபல இயக்குநர்..!

எனக்கு கொரோனா தொற்று இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது

விளக்கேற்றச் சொன்ன பிரதமர்... சிகரெட்டை பற்றவைத்த பிரபல இயக்குநர்..!
ராம்கோபால் வர்மா
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதேபோல் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் தொடங்கி முன்னணி திரைபிரபலங்களும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகள் ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு சிகரெட் பற்ற வைத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும் தனது அடுத்த பதிவில், ”கொரோனா எச்சரிக்கையை மீறுவது என்பது, புகை பிடிக்காதீர்கள் என்ற அரசின் உத்தரவை மீறுவதைவிட மிகவும் ஆபத்தானது” என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஏப்ரல் 1-ம் தேதி தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறி ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் அடுத்த பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்னை April Fool ஆக்கிவிட்டார், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்!
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading