Video | நடிகைகள் மீது பீர் ஊற்றிக் கொண்டாட்டம்... போலீசாருடன் வம்பு...! புது சர்ச்சையில் பிரபல இயக்குநர்

Ram Gopal Varma Gets Fined for Traffic Violation | இஸ் ஸ்மார்ட் சங்கர் பட விளம்பரத்திற்காகவே ராம்கோபால்வர்மா செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

news18
Updated: July 21, 2019, 11:49 AM IST
Video | நடிகைகள் மீது பீர் ஊற்றிக் கொண்டாட்டம்... போலீசாருடன் வம்பு...! புது சர்ச்சையில் பிரபல இயக்குநர்
ராம் கோபால் வர்மா
news18
Updated: July 21, 2019, 11:49 AM IST
ஹைதராபாத் நகர வீதியில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணித்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு 1,325 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா பூரி ஜெகன்நாத் இயக்கி ராம் நடிப்பில் வெளியாகி உள்ள இஸ் ஸ்மார்ட் சங்கர் திரைப்படத்தை காண ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கிற்கு அஜய் பூபதி, அகசியா ஆகியோருடன் மூன்று பேராக ஹெல்மெட் அணியாமல் சென்றார்.

மேலும், திரையரங்கில் சினிமா பார்த்து கொண்டே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் மூன்று பேர் பயனித்தோம். போலீசார் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்தார்.




Loading...



இந்த நிலையில், ஹைதராபாத் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்த குற்றத்திற்காக 1200 ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக 200 ரூபாய் மற்றும் யூசர் சார்ஜூடன் சேர்த்து 1,335 ரூபாய் ராம்கோபால்வர்மாவுக்கு அபராதம் விதித்தனர்.

 



மேலும் ஸ்ஸ்மார்ட் சங்கர் திரைப்பட வெற்றி விழா ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிளப்பில் நடைபெற்ற நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் நடிகைகள், ராம்கோபால்வர்மா ஆகியோர் பீர் பாட்டில்களுடன் நடமாடியும், நடிகைகள் மீதும் தன் மீதும் ராம்கோபால் வர்மா பீதை ஊற்றி வெற்றி விழாவை கொண்டாடும் வீடியோ காட்சிகளையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ராம்கோபால் வர்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இஸ் ஸ்மார்ட் சங்கர் பட விளம்பரத்திற்காகவே ராம்கோபால்வர்மா செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...