பிகில் தான் டாப்... ஆதாரம் தர நான் ரெடி...! சவால் விட்ட திரையரங்கம்

பிகில் தான் டாப்... ஆதாரம் தர நான் ரெடி...! சவால் விட்ட திரையரங்கம்
  • News18
  • Last Updated: November 4, 2019, 3:59 PM IST
  • Share this:
வசூலில் பிகில் படம் தான் அதிகம், அதற்கு ஆதாரம் தர நான் தயார் என்று நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கம் பதிவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

2019-ம் ஆண்டி நெல்லையில் வெளியான படங்களில் முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த படம் பிகில் தான் என்றும் ராம் சினிமாஸ் திரையரங்கில் தான் அதிகம் வசூலானது என்றும் திரையரங்கம் அறிவித்திருந்தது.

இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட TPV Multipex திரையரங்கம், ‘ஒரு விநியோகிஸ்தராக சொல்கிறேன், ஒரு ப்டம் குறிப்பிட்ட ஏரியாவில் எவ்வளவு வசூலாகியுள்ளது, எந்த திரையரங்கில் அதிக வசூலாகி உள்ளது என்று விநியோகிஸ்தர்களுக்கு தான் தெரியும். இது பொய்யான செய்தி என்று பதிவிட்டிருந்தது.இதுகுறித்து நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கம், ”கடந்த மாதம் அசுரன் படம் வெளியானது. அந்த படத்திற்கு நீங்கள் தான் விநியோகிஸ்தர் என்று தெரியும். நெல்லையில் அசுரன் படம் ராம் சினிமாஸ் திரையரங்கில் தான் அதிகம் வசூல் செய்தது என்று உங்களுக்கு தெரியும்.

அது இருக்கட்டும் பிகிலுக்கு வருவோம், நாங்கள் பிகில் படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் முன்பே நெல்லையில் 4 திரையரங்குகளில் பிகில் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி ரசிகர்கள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் தான் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்தோம், இருந்தும் 27000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

பிகில் படம் முதல் வாரத்தில் ராம் சினிமாஸில் தான் அதிகம் வசூல் செய்தது என்று என்னால் நிரூபிக்க முடியும். உங்களால் முடியாமா?

நீங்கள் பிகில் படத்தின் விநியோகிஸ்தர் கூட இல்லை. அப்படி இருக்க நான் சொல்வது பொய் என்று எப்படி கூறுகிறீர்கள்.

எங்களுக்கு மற்றவர் வளர்ச்சியில் பொறாமை இல்லை. இங்க திறமை, தகுதி, இருக்கறவங்க மேல வந்துட்டே தான் இருப்பாங்க

உங்கள் மீது அதிக மரியாதை இருந்தது. சரி அத விடுங்க, ஆதாரம் தர நான் ரெடி. உங்களுடைய பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளது.Also watch

First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்