Samantha Akkineni: 300 திரையரங்குகளில் வெளியாகும் சமந்தாவின் படம்!

Samantha Akkineni: 300 திரையரங்குகளில் வெளியாகும் சமந்தாவின் படம்!

சமந்தா

நடிகர் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற தெலுங்குப் படம் தமிழில் 300 திரையரங்குகளில் வெளியாகிறது.

  • Share this:
    நடிகர் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற தெலுங்குப் படம் தமிழில் வெளியாகிறது.

    இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 2018-ல் வெளியான தெலுங்குப் படம் ரங்கஸ்தலம். கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்தப் படத்தில் ராம் சரண், சமந்தா நடித்திருந்தனர். கிராமத்து உடையில் சமந்தாவின் பர்ஸ்ட் லுக் தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் வைரலானது. ரங்கஸ்தலத்தில் பிரகாஷ்ராஜும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. ராம் சரண் இதில் காது கேட்காதவராக நடித்திருந்தார்.

    தெலுங்கில் மாபெரும் வெற்றியை ரங்கஸ்தலம் பெற்றது. தற்போது அதனை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். ரங்கஸ்தலம் என்றே தமிழிலும் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, 7 ஜி பிலிம்ஸ் பேனர் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் தீவிரமானதால் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாவதாக இருந்த எம்ஜிஆர் மகன் உள்பட பல படங்களின் வெளியீடு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரிய படங்கள் இல்லாத நிலையில் ரங்கஸ்தலத்தை வெளியிட திரையரங்குகள் ஆர்வம் காட்டுகின்றன. சுமார் 300 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

    வறட்சியில் இருக்கும் திரையரங்குகளுக்கு ரங்கஸ்தலம் ஒரு வரப்பிரசாதம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: