கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கலந்துக் கொள்கின்றனர்.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்கு இரண்டு பரிந்துரைகளை பெற்றது. இந்த விருது வழங்கும் விழா ஜனவரி 11, 2023-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாட்டு நாடு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் மற்றும் RRR சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என இரு பிரிவுகளில் கோல்டன் குளோப்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் உலகளவில் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 2023 ஆஸ்கார் விருதுகளுக்கு இப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
கோல்டன் குளோப்ஸ் 2023 ஆஸ்கார் விருதுக்கு முன் நடக்கும் முக்கிய விருது விழாவாகக் கருதப்படுகிறது. ஜனவரி 11-ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் குழுவினர் கலந்துக் கொள்கின்றனர். கோல்டன் குளோப்ஸ் 2023 ஜனவரி 11-ஆம் தேதி பெவர்லி ஹில்டனில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் நடிகர் ஜெரெமி ரென்னர் கவலைக்கிடம்
இதற்கிடையில், இவ்விழாவின் ஒரு பகுதியாக ஆர்ஆர்ஆர் ஜனவரி 9 ஆம் தேதி அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. இந்த திரையிடலில் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajamouli, Ram Charan