Shankar: சென்னையில் இயக்குநர் ஷங்கரை சந்தித்த ராம் சரண்-தில் ராஜு!

ராம் சரண் - ஷங்கர் - தில் ராஜு

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக இது தயாராகிறது. இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    இயக்குனர் ஷங்கரை நடிகர் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.

    இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமானார் ஷங்கர். அத்துடன் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் வேறு படங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என இந்தியன் 2 தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நடிகர் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் சென்னை வந்து ஷங்கரை சந்தித்தனர். படம் குறித்த முக்கியமான தீர்மானங்கள் இந்த சந்திப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    ஷங்கர் - ராம் சரண் இணையும் படம் தில் ராஜுவின் 50-வது படம். அதனால், மிக பிரமாண்டமாக படத்தை எடுக்க விரும்புகிறார் தில் ராஜு. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக இது தயாராகிறது. இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு இசையமைக்கப் போவது அனிருத்தா இல்லை தமனா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. தமன் தெலுங்கின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாய்ஸில் ஷங்கர் இயக்கத்தில் நடித்தது தான் தமனின் சினிமா என்ட்ரி. அதனால், தமன் பெயர் 'டிக்' அடிக்கப்படவே அதிக சாத்தியமுள்ளது என்கிறார்கள்.

    மூவரும் சந்தித்து பேசிய நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: