Home /News /entertainment /

ஆந்திரா வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்த பிரபாஸ்!

ஆந்திரா வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்த பிரபாஸ்!

பிரபாஸ்

பிரபாஸ்

கடந்த கொரோனா பாதிப்பின் போது தெலுங்கு நடிகர்களில் அதிகம் தந்தவர் நடிகர் பிரபாஸ். இந்தமுறையும் அவர் ஒரு கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவ மழை ஏற்படுத்திய சேதங்களைப் போல் ஆந்திராவிலும் மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தெலுங்கு நடிகர்கள் பலரும் தாராளமாக நிதி அளித்துள்ளனர்.

பேரிடர் காலங்களில் அனைவரையும் முந்திக் கொண்டு உதவிக்கரம் நீட்டுவது திரையுலகமாகவே இருந்து வந்திருக்கிறது. புயல், வெள்ளம், கொரோனா என எந்த பாதிப்பாக இருந்தாலும் முதல் நிதியுதவி நடிகர்களிடமிருந்தே வரும்.

இந்நிலையில் ஆந்திரா அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நடிகர் சிரஞ்சீவி 25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரது மகனும் நடிகருமான ராம் சரண் 25 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் மகேஷ்பாபு 25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார்.  ஜுனியர் என்டிஆரும் 25 லட்சங்கள் தனது சார்பாக அளித்துள்ளார். கடந்த கொரோனா பாதிப்பின் போது தெலுங்கு நடிகர்களில் அதிகம் தந்தவர் நடிகர் பிரபாஸ். இந்தமுறையும் அவர் ஒரு கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நிதி அளித்த நடிகர்களில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் ஜனவரி 7-ம் தேதி வெளியாகிறது. பிரபாஸின் ராதே ஷ்யாம் ஜனவரி 18-ம் தேதி வெளியாகிறது. மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா ஏப்ரல் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor prabhas, Ram Charan

அடுத்த செய்தி