கைவிடப்பட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் காண்டம் பரிசோதனையாளர் படம்!

ரகுல் ப்ரீத் சிங்

சாரா அலிகான் உள்பட பல நடிகைகள் இந்த வேடத்துக்காக அணுகிய போது, நடிக்க முடியாது என மறுத்தனர். இறுதியாகத்தான் ரகுல் ப்ரீத் விரும்பி ஒப்புக் கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்த சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை ஒத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஓடிடியில் செக்ஸ் அல்லது வன்முறை சார்ந்த கதைகளுக்கே மவுசு. அத்தகைய படங்களையே காசு கொடுத்து வாங்குகிறார்கள். ரசிகர்களும் விரும்பிப் பார்க்கிறார்கள். அதற்காகவே பல படங்களை தயாரிக்கிறார் ரோனி ஸ்க்ரூவிலா. அதில் ஒன்றுதான் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்த காண்டம் பரிசோதனையாளர் படம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபல காண்டம் தயாரிப்பு நிறுவனங்கள் புதிதாக காண்டத்தை அறிமுகப்படுத்துகையில் காண்டத்தின் செயல்பாடு எத்தகையது என்று இளம் பெண்கள் சோதித்து சொல்வர்அப்படியொரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்தது. அவரை மையப்படுத்தியே கதையும் எழுதப்பட்டது

இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலேயே பல சிக்கல்கள். சாரா அலிகான் உள்பட பல நடிகைகள் இந்த வேடத்துக்காக அணுகிய போது, நடிக்க முடியாது என மறுத்தனர். இறுதியாகத்தான் ரகுல் ப்ரீத் விரும்பி ஒப்புக் கொண்டார்.

Also read... வீரமே வாகை சூடும் - விஷால் வெளியிட்ட அப்டேட்!

தொடர்ந்து இந்த கதாபாத்திரம் குறித்து சர்ச்சையான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. காண்டம் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தப் படம் வருவதை விரும்பவில்லை. தற்போது, படத்தை ஒத்தி வைப்பதாக ரோனி ஸ்க்ரூவிலா அறிவித்துள்ளார்படம் மொத்தமாக கைவிடப்படும் என தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: